அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர் தற்கொலை..

கோவை சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் ( வயது 50) இவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தாராம். கடந்த 13- ஆம் தேதி இவரது மகள் சென்னைக்கு வங்கி வேலைக்கான தேர்வு எழுத சென்று விட்டார் அவருடன் வெங்கடாசலத்தின் மனைவி முத்துலட்சுமியும் சென்றிருந்தார் . இந்த நிலையில் வெங்கடாசலத்தின் மனைவி முத்துலட்சுமி 14 – ந் தேதி கணவருக்கு போன் செய்தார் அவர் எடுத்துப் பேசவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்து பார்க்கச் சொன்னார். அவர்கள் பார்த்த போது வீட்டில் வெங்கடாசலம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடப்பதாக கூறினார்கள். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..