கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர் தயானந்த் மற்றும் திருப்பூரை சேர்ந்த 20 மேற்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் மகள் நாகரத்தினம் (வயது 35) மகன் மணிகண்டன் (வயது 27) ஆகியோர் கோவை ஆர் .எஸ். புரத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த இந்த வர்த்தக நிறுவனத்தில் கோவை திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த பலர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர் .இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 8 சதவீதம் வட்டி தரப்படும் என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நம்பி நான் உட்பட பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோம். அந்த நிறுவனம் அறிவித்தபடி கடந்த ஆண்டு வரை எங்களுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கியது. பின்னர் கடந்த நவம்பர் மாதம் 8 சதவீதம் என்பதற்கு பதிலாக 6 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டது .இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் எங்களுக்கு வட்டி தொகையும் எதுவும் வரவில்லை. இதுகுறித்து நிறுவனத்தில் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து எங்களது முதலீட்டு பணத்தை திரும்பி தரும்படி கேட்டோம். ஆனால் எங்களுக்கு எங்களது முதலீட்டு தொகை ரூ.5 கோடியை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரூ. 5 கோடி மோசடி தொடர்பாக பாக்கியலட்சுமி அவரது தம்பி நாகரத்தினம், மற்றும் மணிகண்டன் இவரது மனைவி ராதாஆகிய 4பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி பணமோசடி செய்ததாக இதுவரை 25க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் ரூ5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தில் 520 பேர் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 150 கோடி முதல் ரூ.180 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம். என்று கருதுகிறோம். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்