கோவை சுண்டக்கா முத்தூர் பகுதி சேர்ந்தவர் நிரோஜ் குமார். அதிமுக தொண்டர் . இவர் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கினார். அந்த ஆட்டோவை எடுத்துக் கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி வாங்க சென்றார்.
மேலும் சாவியை அவரிடம் கொடுத்து புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர் கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டி சென்று கழகத் தொண்டரின் ஆசையை நிறைவேற்றினார். முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி ஆட்டோ ஓட்டிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.