திருச்சியில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு – மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார்..!

திருச்சி மாவட்டத்தில் இன்று 21/7/2024 ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலைப் பணி ஆசிரியருக்கான தேர்வு திருச்சியில் நான்கு தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 326 தேர்வர்களும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 318 தேர்வர்களும் ஆர் சி மேல்நிலைப்பள்ளியில் 333 தேர்வர்களும் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 143 தேர்வர்களும் மொத்தம் 1120 தேர்வர்கள் தேர்வு எழுதினர் தேர்விற்கு விண்ணப்பித்த 1167 பேரில் 47 பேர் தேர்வு எழுதவில்லை.