கோவை: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சமீர் அலி (வயது 26) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரம் சத்திரோடு- 100 ரோடு சந்திப்பதில் உள்ள ஒரு பேக்கரி முன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து இவரது சட்டை பையில் இருந்த 1800 ரூபாயையும், செல்போனையும், பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர் .இது குறித்து சமீர் அலி காட்டூர்போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் காமராஜ் நகர் சேர்ந்த விக்னேஷ் ( வயது 28) உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தை சேர்ந்த அஜித்குமார் ( வயது 17) ஆகிய 2 பேரைநேற்று கைது செய்தனர். செல்போனும், பணமும் மீட்கப்பட்டது.