கோவை : சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் “கிரிண்டர் ஆப் “மூலம் தொடர்பு கொண்டு ஒருவருடன் அறிமுகமானார். அவர் சதீஷ்குமாரை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகே வரும் படி அழைப்பு விடுத்தார் . இதை நம்பிய சதீஷ்குமார் அங்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் அவரை தனியாக அழைத்துச் சென்று தாக்கி அவரிடம் இருந்த பணம் ரு 1,500 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டுசென்று விட்டனர். இது குறித்து சதீஷ்குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
கிரிண்டர் ஆப் “மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் பணம் பறிப்பு..!
