நீலகிரி மாவட்டம், குன்னூர், சின்ன கரும்பாலத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் ( வயது 44 )கோவில் பூசாரி.இவர் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார்.. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரது பையை சோதனை செய்ய தருமாறு கேட்டார்கள். சோதனை செய்யும் போது அதிலிருந்து ரு 10 ஆயிரத்தை எடுத்தனர். அருகில் உள்ள காவல் நிலையத்தில் வந்து விளக்கம் சொல்லி பெற்றுக் கொள் என்று கூறிவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பி விட்டனர். இது குறித்து நித்தியானந்தம் காட்டூர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து புலியகுளம் ,மசால் லே – அவுட்டை சேர்ந்த கார்த்திக் (வயது 29) மதுரையை சேர்ந்த ஜோதிராஜ் ( வயது 21)ஷேக் அப்துல்லா ( வயது 21) ஆகியோரை கைது செய்தார் .இவர்களில் கார்த்திக் ஆட்டோ டிரைவராகவும், ஜோதிராஜ் கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பணம் ரூ 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது..