கோவை பீளமேடு சின்னியம்பாளையம் ஜி. கே .ஆர். நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64) இவர் ராமநாதபுரம் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 48) ராமலிங்கம் நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணா (வயது 50) திருப்பூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ரூ.44 லட்சம் வட்டிக்கு வாங்கி இருந்தாராம். இதற்கு ரூ13 லட்சத்து 75 ஆயிரம் கந்துவட்டியாக கேட்டு மொத்தம் 61 லட்சம் கொடுக்குமாறு 3 பேரும் இளங்கோவனிடம் மிரட்டினார்களாம்.இதுகுறித்து இளங்கோவன் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் சிவக்குமார், அரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்