கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதியில் கோஷ்டி மோதல் – 2 மாணவர்கள் காயம்..!
