தோஷம் கழிப்பதாக கூறி நகை, பணம் மோசடி – போலி ஜோதிடர் கைது..!

கோவை சுந்தராபுரம் அண்ணா டீச்சர்ஸ் காரணியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தர்ராஜ் ( வயது 52) சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சிவகாமிக்கு தோஷம் இருப்பதாகவும், பூஜை வைத்து அதை நீக்கிவிடலாம் என்று கூறினார்கள் . இதை நம்பிய சிவகாமி 4 கிராம் மோதிரம் , ரூ.21 ஆயிரம் பணம் ஆகியவற்றை பூஜையில் வைத்தார். பூஜை முடிந்ததும் நகை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். பூஜை முடிந்த பிறகு அந்த இருவரும் நைசாக வெளியே சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு பூஜை அறையில் வைத்திருந்த 4 கிராம் மோதிரம் ரூ 21 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. நகை – பணத்துடன் இருவரும் எங்கோ மாயமாகிவிட்டனர். இதுகுறித்து சிவகாமி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து கணேசபுரம் ரமேஷ் ( வயது 27) என்பவரை கைது செய்தார் . அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்..