கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன .இங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு சேவை வரி செலுத்த வேண்டும் .இந்த வரியை செலுத்தாமல் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி .செலுத்தாமல் போலிபில் தயாரித்து வழங்குவதாக கோவை உக்கடத்தில் உள்ள ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இயக்குனரக அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஜி.எஸ்.டி. நூண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது கோவை மாநகர பகுதியில் ஒரு நபர் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் இருப்பதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு போலி பில் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது .இதையடுத்து அதிகாரிகள் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அந்த நபரை நேற்று கைது செய்தனர் .அந்த நபர் மோசடி செய்தது ரூ.13 கோடியாகும். அந்த நபரிடமிருந்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திய செல்போன்கள் போலி பில்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .இந்த மோசடி கும்பல் 500 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.