சைதாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த கௌதம் சந்த் தின் மனைவி புஷ்பா பாய் வயது 71. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை நேரில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்தூர் கிராமத்தில் விஜிபி நகர் பகுதியில் 4000 சதுர அடி கொண்ட வீட்டுமனை 1987 ஆம் ஆண்டு எனது தந்தை சம்பத்ராஜ் பிரதீசந் த் அனுபவத்தில் இருந்தது 2019 ஆம் ஆண்டு எனது தந்தை இறந்த பின்பு என்னுடைய அனுபவத்தில் மேற்படி சொத்து இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட சொத்தை விற்பனை செய்வதற்கு வில்லங்கச் சான்று போட்டுப் பார்த்ததில் 2021 ஆம் ஆண்டு கோடீஸ்வரன் நாகேஸ்வரராவிற்கு கிரையம் செய்துள்ளது தெரியவந்தது . ஆவணங்களை சரி பார்த்ததில் உன்னுடைய அப்பா மும்பையில் இறந்தது போன்று போலியான இறப்பு சான்று பெற்றும் மும்பை தாசில்தாரிடம் யது ராஜ் மற்றும் மிஸ்ரா மட்டும் வாரிசு என போலியான வாரிசு சான்று பெற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தும் மோசடி செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவிட்டார். அதன் பேரில் நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணியில் கேடிகள் 1.அன்வர் வயது 55 தகப்பனார் பெயர் மஸ்தான் 1 வது தெரு டாக்டர் அம்பேத்கார் நகர் கொருக்குப்பேட்டை சென்னை 2. மதன்குமார் வயது 40 தகப்பனார் பெயர் தண்டபாணி 2 வது தெரு டாக்டர் அம்பேத்கார் நகர் கொருக்குப்பேட்டை சென்னை 3. பாளையத்தேவன் வயது 51 தகப்பனார் பெயர் தேவராஜன் 1 வது தெரு டாக்டர் அம்பேத்கார் நகர் கொருக்குப்பேட்டை சென்னை என்ற மூன்று கேடிகளும் போலீஸ் வசம் மாட்டிக்கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று கேடிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..