கோவை மாவட்டம் சிறுமுகை தாளத்துறை அருகே உள்ள ரவி என்பவரது தோட்டத்தில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 100 லிட்டர் கள்ளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அன்னூர் போகலூர், மேல்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (வயது 30) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது,
தோட்டத்தில் கள் விற்பனை – விவசாயி கைது..!
