கோவை பத்திரபதிவு சார்பதிவாளரிடம் சரமாரி கேள்வி கேட்ட விவசாயிகள்… பதில் சொல்ல முடியாமல் திணறிய பத்திரபதிவு துறையினர்..!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது . இங்கு பணியில் உள்ள சார்பதிவாளர் செல்வ பாலமுருகன், இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் கூறி வருவதாகவும், அதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, வீண் பிரச்சனைகள் ஏற்படுவதாக அன்னூர் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் சம்மந்தப்பட்ட பத்திர பதிவு அதிகாரிகளிடம் தவறான தகவல்களை கூறி அலைகழிக்கும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார் . அதனையும் மீறி பல்வேறு தவறான தகவல்களை சொல்லி தொந்தரவு செய்வதை சுட்டிக்காட்டி, திடீரென விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கூடி ஆர்பாட்டம் செய்ய முற்பட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக வந்து விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் பால்முருகனின் கோல்மால் வேலைகளைப் பற்றி பொதுமக்கள் இப்படி விவரமாக கேள்விக்கணைகளை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அன்னூர் சார்பதிவாளரை போல தவறான வேலைகளை செய்து வரும் சில பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு சம்பட்டி அடி என்று அங்கு கூடிய பொதுமக்கள் பேசிக்கொணடனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பத்திரபதிவு துறை பற்றி விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..