கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ50 லட்சம் மோசடி. பெண் உட்பட 3 பேர் மீது வழக்கு….

ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் கிளமென்ட் இளங்கோ (வயது 60)இவருக்கு கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 3 பேர் அறிமுகமானவர்கள்.அவர்கள் தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகளும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தெரியும். அவர்கள் மூலமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி அல்லது கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு கிளமென்ட் இளங்கோவின் மகள் ஹர்ஷினிக்கு மருத்துவ படிப்பு இடம் வாங்கி தருவதாக கூறினார்களாம்.இதை நம்பிய கிளாமென்ட் இளங்கோஅவர்களிடம் ரூ.50 லட்சம் கொடுத்தார் அவர்கள் கூறியபடிஎம்.பி.பி.எஸ் இடம் வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் பணத்தை கிளாமண்ட் இளங்கோ திருப்பி கேட்டார். அதையும் கொடுக்கவில்லை. மோசடி செய்து விட்டனர்.இது குறித்த அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட இப்ரின் என்றபிரபு, செந்தில் குமார், ஷர்மிளா ஆகியோரை தேடி வருகிறார்.