கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள சுகுணாபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்குநேற்று ரகசிய தகவல் வந்தது. உடனே போலீஸ்காரர் வடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் சுகுணா புரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 45) என்பதும் லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரிய வந்தது .உடனே போலீஸ்காரர் வடிவேல் அவரை சுகுணாபுரம்புறக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். இதை அறிந்த அப்துல் காதரின் மகன் முஜிப் ரகுமான் ( வயது 21) மற்றும் உறவினர்கள் சகாப்தீன் (வயது 45) சல்மான் ( வயது 23) ஆகியோர் புறக்காவல் நிலையத்திற்கு வந்தனர் ..அவர்கள் 3 பேரும் அப்துல்காதரை விடுவிக்கும்படி போலீஸ்காரர் வடிவேலுவிடம் கேட்டனர் ..இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் அப்துல் காதரை விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் இன்பெக்ட்டர் வந்ததும் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் 3 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் வடிவேலை தாக்கினார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள் நல்லதம்பி, விஜயகுமார் ஆகியோர் விரைந்து வந்து அவர்களை தடுக்க முயன்றனர் ஆனாலும் அவர்கள் 3 பேரும் மற்ற போலீஸ்காரர்களையும் தாக்கினார்கள். பின்னர்புற காவல் நிலையத்தில் இருந்த வாக்கி டாக்கி,மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேத படுத்துவிட்டு அப்துல் காதரையும் மீட்டு சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ்காரர் வடிவேல் அளித்த புகார் பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதை யடுத்து சுகுணாபுரம் பகுதியில் பதுங்கிஇருந்த அப்துல் காதர் அவரது மகன் முஜிப் ரகுமான் |உறவினர்கள் சல்மான் | சகாப்தின் ஆகிய 4 பேரையும்கைது செய்தனர். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், தாக்குதல் பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸ் நிலையத்தில் புகுந்து விசாரணை கைதியை மீட்டுச் சென்ற சம்பவம்பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.