திரைப்பட பானியல் மிளகாய் பொடி தூவி வருமான வரித் துறை அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது சக்தி நகர். இந்த நகரில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித் துறையின் துணை கமிஷனராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி மற்றும் குடும்பத்துடன் இங்கு வீடு வாங்கி வசித்து வருகின்றனர். தன் குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக கால்டெக்சி புக்செய்து கோவை விமான நிலையம் சென்று கிளம்பி உள்ளார். அதை தொடர்ந்து கண்ணன் அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை எதிர் வீட்டில் உள்ளவர்கள் பார்த்து உள்ளனர். இது குறித்து கண்ணனுக்கு போன் செய்து உள்ளனர். வீட்டில் சென்று பார்கும் படி கூறி உள்ளார். எதிர் வீட்டார் வீட்டின் உள்ளே வந்து பார்த்த போது முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பது, பீரோ உள்ளிட்டவை சாவி கொண்டு திறக்கப்பட்டு துணிகளை களையப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தொலைபேசி மூலம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.அதில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவன் பிடி படாமல் இருக்க மிளகாய் பொடி தூவி சென்று உள்ளான். அதே போல் சி.சி.டி.வி யின் சிக்காமல் இருக்க கோமராவை திருப்பி வைத்து திருடியதும் தெரிய வந்து உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், மேப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சென்ற வருமான வரித் துறை அதிகாரி அவசர அவசரமாக கோவை வந்து சுமார் 50 சவரன் நகை கொள்ளை போனதை உறுதி செய்தார். உயர் அதிகாரி வெளியூர் சென்ற வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.