குழந்தைகளை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற 1,088 பேருக்கு அபராதம்..!

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை நகரில் பள்ளிகளில் குழந்தைகளை விட இருசக்கர வாகனங்களில் அழைத்துவரும் பெற்றோர் ஹெல்மெட் அணியாமல் வருவதாக புகார்கள் வந்தன. இதனால் நகரம் முழுவதும் பள்ளிக்கூட பகுதிகளில் 4 நாட்கள் தீவிர வாகன சோதனை நடந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டியதாக மொத்தம் ஆயிரத்து 1,0 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. கோவை நகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து சீரமைக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .கோவை உக்கடம் மேம்பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. சுங்கம் செல்வதற்கான மேம்பால பணிகள் நிறைவு பெற்றதும் மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் போது மேலும் நெரிசல் குறையும். நகரில் தேவையான இடங்களில் கூடுதலாக ” யூ டேர்ன் ” அமைப்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு பணிகளைமேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..