உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் தீ விபத்து: தீயை அணைக்க சென்ற போது கட்டுக்கட்டாக பணம் – அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள்..!

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக யஷ்வந்த் வர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் திடெீரன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது யஷ்வந்தர் வர்மா வீட்டில் இல்லை.

இருப்பினும் யஷ்வந்த் வர்மாவின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

மேலும் விவாதத்தை கிளப்பியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிற்கும் தகவல் சென்றது. இதையடுத்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உறுப்பினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் யஷ்வந்த் வர்மாவை டெல்லியில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.