தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு – திருச்சியில் களமிறங்குவதாக தகவல்.!!

மிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு திருச்சியில் உள்ள சிறுகனூரில் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மீது ஆர்வம் கொண்ட விஜய், அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் ஆர்வத்துடன் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகின்றனர். கட்சியைத் தொடங்கிய பிறகு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய், வேறு ஏதும் அரசியல் நிகழ்வுகளில் பெரியளவில் தலையிடாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும், மாணவர்களுக்கு வழங்கிய கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..