கோவையை சேர்ந்தவர் நிகேதன் ( வயது 32) இவர் பெண் தேடி வந்தார். இதற்காக திருமண தகவல் மையத்திலும் பதிவு செய்தார். அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பெண் நிகேதனுக்கு அறிமுகமானார். 2 பேரும் செல்போனில்,வீடியோ கால் மூலம் மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். அப்போது நிகேதன் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டார். இதை யடுத்து அவர் அந்த பெண்ணை பார்ப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். தொடர்ந்து 2 பேரும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது 2 பேரும் ஒட்டலில் ஒரே அறையில் தாங்கினார்கள் . அந்த நேரத்தில் நான் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த பெண்ணிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பிறகு அந்த பெண் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர் நிகேதன் அந்த பெண்ணிடம் பேசுவதை குறைத்து கொண்டதுடன், அவருடன் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்ததாக கூறப்படுகிறது. எனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் கோவையைச் சேர்ந்த நிகேதன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் நிகேதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி வடமாநில பெண்ணுடன் உல்லாசம் – கோவை வாலிபர் மீது வழக்கு..!.
