கோவை அவினாசி சாலையில் மேம்பால பணி… நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!!

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை அவிநாசி ரோடு, ஹோப் கல்லூரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே நாளை ( ஞாயிற்றுக்கிழமை) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கு நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு ,எஸ். என் .ஆர் .சந்திப்பு பி. எஸ் .ஜி . சந்திப்பு வழியாக அவினாசி ரோடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பயணியர் மில் ரோடு, அவிநாசி ரோடு, சந்திப்பில் இடது புறமாக திரும்பி காந்திமா நகர் மேம்பாலம் ,காந்திமா நகர் சந்திப்பு, தண்ணீர் பந்தல் ரோடு, ‘ எஸ் பென்ட்” சென்று வலது புறம் திரும்பி டைட்டல் பூங்கா ரோடு மற்றும் கொடிசியா ரோடு வழியாக அவிநாசி சாலையை அடையலாம். இதே போல ஆர். எஸ். புரம், தடாகம் ரோடு, 100 அடி ரோடு ,சிவானந்தா காலணி பகுதிகளில் இருந்து அவிநாசி சாலை வழியாக விமான நிலையம் திருப்பூர் ,ஈரோடு , சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சக்தி ரோடு, கணபதி, விளாங்குறிச்சி, காளப் பட்டிரோடு வழியாக அவிநாசி சாலையை சென்றடையலாம். மேலும் உக்கடம், ரேஸ்கோர்ஸ், பகுதியில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் சுங்கம் ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் வழியாக எல். அன்ட் டி பைபாஸ் சாலையை சென்று குறிப்பிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லலாம் போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.