நீலகிரி உதகை விவேகானந்தா தமிழகம் செல்லும் சாலையில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் தடம் பதிவாகியுள்ளது புலி அல்லது சிறுத்தை புலி என சந்தேகம் எழுந்து உள்ளது இதனை கண்டு கொள்ளாத வனத்துறை..பகுதி மக்கள் அதிர்ச்சி..தொடர்ந்து கண்காணிக்க விட்டால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தன்னார்வலர்கள் எச்சரிக்கை??
நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், தமிழக சாலை செல்லும் வழி மூன்று சாலை பிரியக்கூடிய இடமாகும், விவேகானந்தா பகுதி சாலை ஓரத்தில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் பதிவு காணப்பட்டது, இந்த ரத்த கால் பதிவு கரை ஒரு சில தூரம் வரையிலும் காணப்படுகிறது. இதனை வனத்துறையினரிடம் கேட்டபொழுது, இது எந்த மிருகத்தின் கால் தடம் என்று கணிக்க முடியவில்லை, ஆனால் இதனை ஆராய்ச்சி மையத்திற்கு
அனுப்பிய பிறகு நாங்கள் சொல்கிறோம் என்று தெரிவித்தனர்,
ஆராய்ச்சி மையத்தில்
இது புலியின் கால் தடம் என்று உறுதி செய்யப்பட்டது, இந்த புலியின் கால் தடம் சிறிது தூரம் ரத்தக்கரைங்களுடன் புலியின் கால் பதிவு காணப்பட்டன, சில இடங்களில் ரத்தம் அதிகமாக சிந்தியது காணப்பட்டது, இந்த வழியில் பொதுவாக மாலை நேரங்களில் சிறு குழந்தைகள் பெண்கள் கடைகளுக்கு வருவது வழக்கம், மற்றும் வேலைகளை முடித்து பெண்கள் ஆண்கள் வயது முதியவர்கள் நடந்து செல்லும் முக்கியசாலியாகும்,
மற்றும் மாலை நேரங்களில் தமிழக சாலை வழியாக அநேகர் நடைப்பயணம்
மேற்கொள்கிறார்கள்,
இந்த சாலை நடப்பதற்கு பாதுகாப்பு இல்லை,
ஏற்கனவே ரோஸ் மவுண்ட் விவேகானந்தா காலனி பகுதியில் பல மாதங்களாக சிறுத்தை புலி அங்கு வீட்டு வளர்ப்பு 10கும் மேற்பட்ட நாய்களை வேட்டையாடி உள்ளது, இதை பலமுறை பொதுமக்கள் வனத்துறையிடம் சொல்லியும் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் வனத்துறையினர், தற்போதும் சிறுத்தை மீண்டும் இருட்டுவதற்கு முன்னதாகவே அப்பகுதியில் உலாவுவதால் சிறு குழந்தைகள் வெளியே விளையாடுவதற்கோ செல்வதற்கோ ஆபத்தாகி உள்ளது,
பகுதி மக்கள் கூறுகின்றனர், நேற்றைய முன் தினம் மீண்டும் சிறுத்தை புலி உலாவதை பகுதியில் உள்ள இருவர் பார்த்திருப்பதால் மீண்டும் அப்பகுதி அச்சத்தில் மூழ்கியுள்ளது, தற்போது புலியின் நடமாட்டம் உறுதியாகி உள்ளது, இதனை வனத்துறையினர் கண்காணித்து உறுதி செய்யாவிட்டால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,
தற்போது நீலகிரி உதகை பல பகுதியில் மிருகங்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் உதகை விவேகானந்தா இல் பங்க் தமிழகம் செல்லும் சாலையில் ரத்த கரையுடன் புலியின் கால் தடம் பதிவாகி உள்ளது புலியின் நடமாட்டத்தால் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்,
வனத்துறையினர் உடனடியாக புலியும் கால் தடம் பதிவாகிய இடங்களை ஆராய்ச்சி செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் ஆர்வலர்கள் எச்சரிக்கை
இந்த சம்பவம் காரணமாக பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்?