ஆவடி காவல் ஆணையரக ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி ( மட்டும்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையரக ஊர்க்காவல் படையில் ஒரு வட்டார தளபதி மற்றும் ஒரு துணை வட்டார தளபதி (பெண்கள் மட்டும்) பதவிக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள சமூக சேவை மற்றும் நல்ல சமூக பின்புலம் உள்ள விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்
18 வயது நிரம்பிய
மற்றும் 50 வயது நிறைவு செய்யாத
2. நல்ல கல்வி தகுதி நன்னடத்தை மற்றும் நல்ல உடல் தகுதி வாய்ந்த நபர்கள்
3. ஆவடி காவல் ஆணையரக எல்லையில் வசிக்கும் நபர்கள் 4. பொதுநலன் சமூக சேவை மற்றும் தன்னார்வ தொ ண்டில் ஆர்வம் உள்ள நபர்கள்
மேற்கண்ட தகுதி வாய்ந்த நபர்கள் 15.7.2024 தேதி க்குள் சுய விவரம் (resume ) பிறப்புச் சான்று ஆதார் சான்று கல்வித் தகுதி உடற்த குதி குறித்த மருத்துவ சான்றிதழ் தற்போதைய பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்..
FOR WOMEN ONLY… ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி, துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!
