முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் திடீர் மரணம்..

கோவை ஆர் .எஸ் . புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (வயது 66) முன்னாள்காங்கிரஸ் எம்எல்ஏ . தற்போது இவர் திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. அவர்களுக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளன இவர்களில் 2 மகன்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் சென்னையில் வசித்து வருகிறார்கள். 3-வதுமகள் வெங்கட்ராமன் கோவை வசிக்கிறார். இந்த நிலையில் வெங்கட்ராமுக்கும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சம் சிகாபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி – சிவமுத்து தம்பதியினர் மகள் பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது .இவர்களது திருமண வரவேற்பு திருப்பதியில் நேற்று முன் தினம் நடந்தது. நேற்று காலையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்துவிட்டு மணமக்கள் மற்றும் இரவு வீட்டாரின் பெற்றோர் காரில் கோவைக்கு திரும்ப திருப்பதி மலையிலிருந்து கீழே இறங்கினர். அப்போது கோவை செல்வராஜுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார் .அவரது உடல் காரில் கோவைக்கு இன்று கொண்டுவரப்பட்டது. ஆர். எஸ் .புரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ,மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக்,வடக்கு மாவட்ட செயலாளர் ரவி,தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும்,தொழிலதிபர்களும், வியாபார பிரமுகர் களும் பொது மக்களும். அஞ்சலி செலுத்தினர்.கோவை செல்வராஜ் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த 1991- 96 ஆம் ஆண்டுகளில் கோவை மேற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்த அவர் ஜெயலலிதாமறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.