கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் உடல்நல குறைவால்கோவை ராமநாதபுரம், கருணாநிதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் மரணம் அடைந்தார். இவர்1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 -ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்து, பொதுமக்களின் அன்பு, நன்மதிப்பைப் பெற்றவர்.முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன்பைப் பெற்றவர். தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றவர். கழகத் தலைவர் தளபதி கோவைக்கு வரும்போதெல்லாம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இரா.மோகன் இல்லத்திற்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார். கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர்.மிசா கைதியாக ஓராண்டு காலம் சிறைவாசம் இருந்தவர்.கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று, கழகத்திற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் கொள்கை உறுதி மிக்கவராகச் செயல்பட்டார். கழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்தார்.இவரது உடலுக்குதுணை முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி,எம்பிக்கள்எம்எல்ஏக்கள்,மேயர்மாநகர், மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் எம் எல் ஏ, ) உள்பட ஏராளமானவர்கள் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்..
முன்னாள் எம்.பி இரா.மோகன் இன்று காலமானார்..
