மாஜி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை..

கோவை ஆர். எஸ். புரம், லாலி ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 64) ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனலட்சுமி மனவருத்தத்துடன் இருந்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார் . சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் தனலட்சுமி இறந்தார். இது குறித்து ஆர் .எஸ் . புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..