கோவையில் பெண் போலீசாக நடித்து ஸ்கூட்டர் வாங்கி மோசடி – 2 பேர் கைது..!

கோவை தெலுங்கு பாளையம், பனைமரத்தூர் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி . இவரது மகன் தினேஷ் ( வயது 34) இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் 12 – 12 – 23 அன்று பெண் காவலர் சீருடையில் ஒரு பெண் சென்றார்.தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள “ஸ்கூட்டி பெப்” வாங்கினார்.மாதம் ரூ 1,300 செலுத்துவதாக கூறி,போலி அடையாள அட்டை, ஆதார் கார்டு ஜெராக்ஸ் கொடுத்து ஸ்கூட்டியை எடுத்து சென்றார்.பின்னர் அவர் எந்தவித பணமும் செலுத்தவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு அந்த பெயரில் யாரும் பெண் போலீசாக வேலை பார்க்கவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தினேஷ் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து பெண் போலீசாக நடித்து ஸ்கூட்டி வாங்கி மோசடி செய்த பேரூர் சிறுவாணி மெயின் ரோட்டை சேர்ந்த அம்பிகா ( வயது 37)இவருக்கு உதவியாக இருந்ததாக பேரூர் செட்டிபாளையம் ஏ.டி. காலனியைச் சேர்ந்த சேர்ந்த ரகு (வயது 37) ஆகியோரை கைது செய்தார்.இவர்களிடமிருந்து போலி அடையாள அட்டை, சீருடை, ஸ்கூட்டி கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.