வங்கியில் கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் 4 பவுன் செயின் நூதன மோசடி – மர்ம ஆசாமிக்கு வலை..!

கோவை பீளமேடு ஏ.டி .காலனி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார்.இவரது மனைவி ஞான செல்வி (வயது 50) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றார் . அப்போது அங்குள்ள மட்டன் ஸ்டால் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை அழைத்து வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதை ஞான செல்வி நம்பினார். வங்கியில் கடனுதவி பெற வேண்டுமானால் நீங்கள் நகை அணிந்து இருக்க கூடாது .அந்த நகையை கழட்டி இந்த பேப்பரில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பேப்பரை கொடுத்தார்.அதில் ஞானசெலவி நகைகளை கழட்டி வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பார்சலை மாற்றிவிட்டார்.வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மாயமாகி விட்டார். ஞான செல்வி அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கல் இருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்..