கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத் . இவரது மனைவி அமீதா ( வயது 62 )இவர் தாஸ் உம்ரா சர்வீஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் உம்ரா யாத்திரை அனுப்புவதாக 66 பேரிடம்ரூ 36 லட்சத்து 51 ஆயிரம் வாங்கினார். இந்த பணத்தை சென்னை புரசைவாக்கம் பெருமாள் பேட்டையில் உள்ள தாஸ் உம்ரா சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரிடம் கொடுத்தார் . ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட ஜாபர் அலி 66 பேரை உம்ரா யாத்ரா அனுப்பவில்லை. மோசடி செய்து விட்டார் .இதுகுறித்து அமீதா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
யாத்திரை அனுப்புவதாக 66 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி..!
