கோவை ராமநாதபுரம் புலியகுளம் ,பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் வயது 40 . இவர் சாய் பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த ஹக்கீம் ( வயது 38) என்பவர் அறிமுகமானார். ரூ4 லட்சம் கொடுத்தால் தனது வீட்டை போக்கியத்துக்கு தருவதாக கூறினார். இதை நம்பி தியாகராஜன் ஹக்கிமிடம் ரூ.4 லட்சம் கொடுத்தார். வீடும் கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ரூ 4 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து தியாகராஜன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேகர் இவர் மீது மோசடி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹக்கி மைநேற்று கைது செய்தார்..
போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி சமையல் மாஸ்டரிடம் ரூ. 4 லட்சம் மோசடி- ஒருவர் கைது..!
