தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி: போலி நகைகளை அடைத்து அடகு வைத்த பெண் ஊழியர் கைது
கோவை குனியமுத்தூர் ஐ.சி.எப் பின்காரப் நிதி நிறுவனம் மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது போல நகைகளை அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் உதவி மேலாளர் சத்யா, கிளை அதிகாரி கார்த்திகா, ஊழிய சரவணகுமார் ஆகியோர் நிதி நிறுவன கணக்குதாரர்களின் கையெழுத்தை போலியாக போட்டு போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக உதவியாளர் சத்யா கடந்த எட்டாம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை அதிகாரி கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒத்தக்கால் மண்டபம் பிரிமியர் மில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி ஆவார். கார்த்திகா மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.