கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி மைதிலி ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் பழகினார்கள். மைதிலியிடம் வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க்கலாம். இதில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய மைதிலி அவர்களிடம் பல்வேறு தவணைகளில் ரூ.5,71, ஆயிரம் கொடுத்தார்.தொழிலும் தொடங்கவில்லை லாபமும் கொடுக்கவில்லை. ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து மைதிலி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மோகன் அவரது மனைவி அம்பிகா ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்கள் இதற்கு முன் பீளமேடு பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரிடம் இதே போல ஆசை வார்த்தை காட்டி ரூ 9. லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது..
பெண் ஊழியரிடம் ரூ5.71 லட்சம் மோசடி – தம்பதிக்கு வலைவீச்சு..!
