போலி நகைகளை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் மோசடி – தந்தை, மகன் கைது..!

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர், 3-வது வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகன் விசு (வயது 22) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் .இவரிடம் 2 பேர் 23.670 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ68. ஆயிரம் கடன் வாங்கினார்கள் அந்த நகைகளை விசு பரிசோதித்து பார்த்தபோது அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரிய வந்தது. இது குறித்து ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பாலதண்டபாணி என்ற தண்டபாணி (வயது 65) அவரது மகன் விவேக் என்ற மணி (வயது 35) ஆகியோரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது..