கோவை கவுண்டம்பாளையம், கந்த கோனார் நகரை சேர்ந்தவர் தங்கநாடான் (வயது 59) வியாபாரி. இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த தனது மகனின் வேலை விஷயமாக பலரிடம் சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரவி என்பவர் அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி உடனே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் . அதை நம்பிய தங்க நாடான் ரவி கூறிய சேலத்தைச் சேர்ந்த சரவணன், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தைச் சேர்ந்த ஜெயந்தி ( 41 )ஆகியோரை வரை சந்தித்தார். அவர்கள் தங்களுக்கு தெரிந்த பலர் உயர் அரசு அதிகாரிகளாக உள்ளனர். நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் மூலமாக உங்கள் மகனுக்கு கண்டிப்பாக அரசு வேலை வாய்ப்பு கொடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்த தங்கநடான் ரூ 9 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிகொண்ட அவர்கள் விரைவில் அரசுவேலைவங்கி தருவதாக கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை .இது தொடர்பாக தங்க நாடான் பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் .அவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை இதனால் ஏமாற்றமடைந்த தங்க நாடான்அந்த 2 பேரையும் தொடர்பு கொண்டு தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை யடுத்து அவர்கள் ரூ.90 ஆயிரம் மட்டும்திருப்பி கொடுத்துள்ளனர் மீதி ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்தை தர வேண்டும் என்று பலமுறை கேட்டும் அவர்கள் தரவில்லை. இந்த நிலையில் கவுண்டம்பாளையத்தில் நின்று கொண்டிருந்த சரவணனை தங்க நாடான் சந்தித்துபணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தங்க நாடானை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது..இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் சரவணன், ஜெயந்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக வியாபாரிடம் ரூ.8 லட்சம் மோசடி .பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
