சமீப காலமாக ஆவடி மற்றும் அம்பத்தூர் கொரட்டூர் பூந்தமல்லி போரூர் மாதவரம் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் போலி பத்திரங்கள் ஆள் மாறாட்டங்கள் செய்து வீட்டு மனைகளை அபகரிப்பது வேறொருவர் இடத்தை தன்னுடைய இடமென்று இப்பகுதியில் ஏமாற்றி வருவது கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரிடம் மாட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இது பற்றிய விவரம் வருமாறு – ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மத்திய குற்ற பிரிவு இல்ல பிரச்சனை தீர்வு பிரிவில் இப்ராஹிம் வயது 76. அப்பா பெயர் காலிது கீழ் பள்ளி வாசல் தெரு விளம்பூர் செங்கல்பட்டு என்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் தனக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகர் பகுதியில் 2420 சதுர அடி இடம் உள்ளது. 2022ம் ஆண்டு ஊரை ஏமாற்றும் பயங்கர கேடிகள் விஜயகுமார் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்ராஹிம் இடத்தை அபகரிக்க திட்டமிட்டு கேடி அப்துல் ரஹ்மானோடு கூட்டு சேர்ந்து கொண்டு இப்ராஹீம் இறந்து விட்டதாக குறிப்பிட்டு போலி இறப்பு சான்று போலி வாரிசு சான்று ஆகியவற்றை தாக்கல் செய்து மனைவி ஹ சீனா பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதியும் ஹசீனா பிரகாஷ் பெயருக்கு பொது அதிகாரம் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். தொடர்ந்து கேடி பிரகாஷ் மேற்படி இடத்தை கேடி செஞ்சம்மாள் என்பவருக்கு கிரைய பத்திரம் பதிவு செய்து இப்ராஹிம்க்கு சொந்தமான இடத்தை ரூபாய் 90 லட்சம் மதிப்புடையது. மனையை அபகரிப்பு செய்தது சம்மந்தமாக முக்கிய குற்றவாளி பயங்கர கேடி விஜயகுமார் என்பவன் 18.5.2024ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான். இதேபோன்று ஷீலா அப்பாவு என்பவருக்கு சொந்தமான அம்பத்தூர் பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகர் 2790 சதுர அடி கொண்ட இடம் ஆனது விற்பனைக்கு இருப்பதாக கேடி விஜயகுமார் மற்ற பிராடுகளுடன் கூட்டு சேர்ந்து கோவிந்தராஜ் இடம் விலை பேசி ரூபாய் 65 லட்சம் பெற்றுக் கொண்டு ஷீலா அப்பாவு போன்று வேறு பெண்ணை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் கிரையதாரர் கோவிந்தராஜுக்கு கிரைய விற்பனை செய்து மோசடி செய்து உள்ளான். இந்த வழக்கில் 18.6.2024 அன்று கைது செய்யப்பட்டுள்ளான். கேடியும் பிராடும் விஜயகுமார் என்பவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் இது போன்ற நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. கேடி விஜயகுமார் வயது 47. தகப்பனார் பெயர் துரைசிங்கம். கிழக்கு பானு நகர் 5 வது தெரு புதூர் அம்பத்தூர் சென்னை. இது போன்ற கேடிகள் நில அபகரிப்பு குற்றங்களை தொடர்ந்து செய்து வருவதை தடுக்கும் நோக்கத்தில் கி. சங்கர் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி உத்தரவின்படி கேடி விஜயகுமார் என்பவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டான்.