வாராந்திர விடுமுறையை வழங்காததால் மன அழுத்தத்தில் தவிக்கும் DSP முதல் காவலர்கள் வரை..!

தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மன அழுத்தம் மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் மன அழுத்தத்தை போக்கவும் தங்கள் குடும்பத்தாருடன் இருக்கவும் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. திருவிழா, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு சமயங்களில் சூழ்நிலை பொறுத்து ஓய்வு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை மட்டும் ‘வேத வாக்காக’ எடுத்துக்கொண்டு பல மாவட்டங்களில் குறிப்பாக ரூரல் பகுதிகளில் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. போராடிதான் லீவு வாங்க வேண்டியுள்ளது. இதற்கு அதிகாரிகளும் விதிவிலக்கல்ல.

கோவை டி.ஐ.ஜி.,யாக இருந்த விஜயகுமார், கடந்த ஜூலை 7 ல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தத்தால் இம்முடிவை அவர் எடுத்ததாக அதிகாரிகள் கூறிய நிலையில், ‘6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமே தற்கொலைக்கு காரணம்’ என நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

தேனியில் நடந்த விஜயகுமாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால், மதுரையில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, போலீஸ் முதல் அதிகாரிகள் வரை விடுமுறை கேட்டால் உடனடியாக அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இடமாறுதல், விடுமுறை கேட்போரிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் அரசியல் செல்வாக்கால் சிலர் மட்டும் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.

இது சம்பந்தமாக பெயர் கூற மறுத்துவிட்ட போலீசார் கூறுகையில், ”இந்தாண்டில் இதுவரை போலீசார் முதல் அதிகாரிகள் வரை 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விடுமுறை, இடமாறுதல் கிடைக்காமைதான் முக்கிய காரணம். எங்களிடம் விருப்ப மனு பெற்று 3 மாதங்களாகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பழைய இடத்திலேயே அதே மனஅழுத்தத்துடன் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

மேலும் எங்களுக்கு விடுமுறை அளித்ததை போல் லெட்ஜர் மைண்டைன் செய்கிறார்கள் ஆனால் ஏதாவது பாதுகாப்பு காரணம் கூறி விடுமுறை வழங்குவது இல்லை அதனால் எங்கள் குடும்பம் மன அழுத்தத்தில் உள்ளது. பல காவல் துறையினர் பணியை விட்டுக் கூட சென்று விடலாம் என்று முடிவு செய்யக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. பொதுவாக மாநகர் பகுதிகளில் ஓரளவு விடுமுறை வழங்கி விடுகிறார்கள் ஆனால் ரூரல் பகுதியில் விடுமுறை வழங்குவது இல்லை காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக வாரம்தோறும் விடுமுறை விட வேண்டும் என்று உத்தரவு போட்ட தமிழக முதல்வர் அந்த உத்தரவு செயல்பாட்டில் உள்ளதா என்று ஆய்வு செய்து காவலர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்
அப்போதுதான் மன அழுத்தம் இல்லாமல் காவலர்கள் பணி புரிவார்கள் இல்லையென்றால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்

இது சம்பந்தமாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையொட்டி சில மாதங்களில் தமிழக அளவில் பெரிய அளவில் இடமாறுதல் நடக்கும். அப்போது விருப்ப மனு கொடுத்தவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாற்றப்படுவர்” என்றார்.

எது எப்படியோ மனிதர்களுக்கு எட்டு மணி நேர வேலை 8 மணி நேர உறக்கம் எட்டு மணி நேர ஓய்வு
கண்டிப்பாக தேவை ஆனால் விதிவிலக்காக ஒரு சில துறைகளில் இது போன்று இருக்க முடியாது ஆனாலும் வாரந்தோறும் மன அழுத்தத்தில் கடுமையான பணியாற்றும் காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் தங்கள் குடும்பத்தாருடன் இருப்பதற்கு தமிழக அரசு அறிவித்த வாராந்திர விடுமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது

விடுமுறையே இல்லாமல் இயந்திரம் போல் பணியாற்றும் காவல்துறையினர் கண்டிப்பாக உளவியிலாக மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள் இதனால் மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள அவர்கள்
மன அழுத்தத்தில் காரணமாக இயல்பு நிலையில் இருந்து மாறுவதற்கும் காரணமாக அமைந்து விடும் ஆகவே சட்ட ஒழுங்கை பாதுகாத்து வரும் காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்க தமிழக அரசு அறிவித்த வாராந்திர விடுமுறையை கண்டிப்பாக வழங்கினால் மட்டுமே காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் நன்மை மயக்கும் இது சம்பந்தமாக மற்ற அரசியல் கட்சியினர்களும் மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை வைக்க வேண்டும்..

காவலர்களுக்கு வாராந்திர விடுமுறையை விடுவாரா தமிழகம் முதல்வர் ???