கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து குதித்து இன்று காலையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் பெயர் சிவகண்டன் என்பதும், இவர் கடலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்றும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
கோவை டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து குதித்து மாற்றுத்திறனாளி தற்கொலை..
