கோவையை உலுக்கும் கந்துவட்டி கும்பல்… பெண்களை குறி வைத்து தாக்கும் அடாவடி வசூல் ரவுடிகள்.!!

கோவையில் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள், சிறிதும் பெரிதுமாக தொழில் கூடங்கள் உள்ளன. இவைகளில் பணி செய்ய ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஊழியர்களின் ஊதியம் குறைவோ,நிறைவோ அதுபற்றி கவலையின்றி வாழ்க்கையை நகர்த்த தத்தம் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் வாழும் சூழல் நிலையே இங்கே காண முடிகிறது.

தமிழ் நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் கந்து வட்டி கும்பலின் செயலை ஒடுக்கி இருந்தது, இதனால் அவர்கள் இடம் தெரியாமல் அடங்கி ஒதுங்கி இருந்தனர், அரசும் கூட்டுறவு சங்கங்கள்,தேசிய வங்கிகள் மூலமாக சிறு உதவி தொழிற் கடனை,தனிநபர் கடன் வழங்கி வருகிறார்கள் அந்த பணத்தை கொண்டு நடுத்தர குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை மேம்படவும், பிள்ளைகளை, மருத்துவசெலவு போன்றவைக்கு உதவுதாக கூறுகின்றனர். அதுபோல அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆனால் நடுத்தர குடும்பத்தினர்,தங்களுக்கு ஏற்படும் திடீர் மருத்துவச்செலவு,வேலையில்லாத நேரத்தில் அவசரத் தேவைக்கு பணம் தேவை என்றால் பக்கத்து வீட்டுக்கார்களிடம் வாங்கி கொண்டு பின் தனக்கு சம்பளம் வந்தவுடன் கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். இது தான் இன்றைய நடுத்தர மக்களின் நிலை ,மற்றும் அதற்கும் கீழே உள்ள மக்களின் வாழ்க்கை நடை முறையாகவே உள்ளது, இது எல்லாம் கோவையில் மட்டும் இல்லை தமிழகத்தில் வாழும் நடுத்தர குடும்பங்களின் பெரும் பாலும் உள்ள நடைமுறை வாழ்க்கையாக தான் உள்ளது.

இப்படி இருந்த மக்களை, ஒடுங்கி ஒதுங்கி இருந்த கந்து வட்டி கும்பல், தற்போது மைக்ரோ பைனான்ஸ், மகளிர் சுயஉதவிக்குழு கடன் என்ற பெயரில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குகின்றனர். இதில் பல்வேறு வழிகளில் வட்டிக்கு பணத்தை கொடுத்து அதிகமாக பணம் வசூல் செய்வதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது,இதெல்லாம் தெரிந்தும் அவசர தேவை என்று வரும் நிலையில் இப்படி வட்டிக்கு பணம் வாங்கி மக்கள் அவதிபடுகிறார்கள். இப்போது வேறுவழியில் மக்களை குறிவைத்து குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பெண்களை மகளிர் குழு என்ற பெயரில் குழுவாக இணைத்து அவர்களுக்கு குறைவான வட்டியில் கடன் உதவி வழங்குவதாக ஆசை வார்த்தைகளை பேசி பணத்தை கொடுக்கின்றனர். இப்படி கொடுக்கும் பணத்தை வசூல் செய்ய கந்து வட்டிக்காரர்கள் , டிப்டாப்பாக ரவுடிகளை ரெடி செய்து பணம் கலெக்சன் செய்ய அனுப்புகின்றனர். அப்படி வசூல் செய்ய வரும் டிப்டாப் வசூல் ராஜாக்கள் தாங்கள் பேசுவது எல்லாம் நல்ல வார்த்தை கிடையாது, வாய் கூசும் கெட்ட வார்த்தையை பேசுவது, வட்டி வசூல் செய்ய அதிகாலையிலே வீட்டிற்கு கலெக்சன் பாய்கள் என்று போர்வையில் வந்து அடாவடி செய்வது, வட்டி பணம் கொடுக்க தாமதம் ஆனால் உடனே, வாய் கூசாமல் கெட்ட வார்த்தைகளை பேசி மிரட்டுவது, நீ என்ன செய்வாய்யோ தெரியாது உடனே வட்டி பணம் கொடு, வட்டிக்கு பணம் வாங்கும் போது பல்லை காட்டி வாங்கின இப்ப பணத்தை திருப்பி கேட்டா கசக்குதா என்று பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவித பயத்துடன் சொல்லுகின்றனர். இதுபோல கவிதா என்ற பெண் (பெயர்மாற்றம் செய்யபட்டதுள்ளது) அவசர தேவைக்காக ஆர்கேஎல் என்ற மகளிர் குழுவிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக பனிரெண்டாயிரம் வரை பணம் கட்டியதாகவும், இன்னுமும் ஆறாயிரம் ரூபாய் பணம் கட்டு என்று கூறி மிரட்டுறாங்க, நானும் எனது உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் இருந்ததால் பணம் கட்ட தாமதம் ஆச்சு, கொஞ்ச நாளில் பணத்தை திருப்பி தருகிறேன் என்றால் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்டுறாங்க வசூலுக்கு வந்த கலெக்சன் ஆட்கள் என்றார் நானும் ரெண்டு முறை போலீசில் புகார் சொன்ன வரல, இப்ப எனக்கு பயமா இருக்கு என்று நம்மிடம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கோவை நகர் பகுதியில் குறிப்பாக பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுவுரிப்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்களை கந்து வட்டி கார்கள் வீட்டிற்குள்ளே வந்து மிரட்டுகிறார்கள், என போலீசிடமும், அவசர உதவி எண் 100க்கும் போன் செய்து புகார் கொடுக்கின்றனர், போலீசார்கள் கந்து வட்டி வசூல் செய்ய வரும் ராஜாக்களிடம் விசாரித்தால் நாங்க அப்படி யாரையும் விரட்டல்ல , மிரட்டவில்லை என கூறி தப்பித்து கொள்ளுகிறார்கள். நேற்று மட்டுமே பீளமேடு காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட கந்துவட்டி புகார் கள் கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது. வட்டிக்கு வாங்கிய பெண்களை பணம் வசூலிக்க வரும் கலெக்சன் பாய்கள்,பெண்களை அவர்களது குழந்தைகள் முன்னால் தகராறு செய்வது, கையைபிடித்து மிரட்டுவது அவர்களின் பிள்ளைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களை செய்வதாக சொல்லபடுகிறது, இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் இது இப்படியே கந்து வட்டிக்காரர்கள், மைக்ரோ பைனான்ஸ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் வட்டிக்கு பணம் கொடுத்து ரன் வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டியை விட கொடூரமா வட்டி பணம் வசூல் செய்கிறார்கள், அப்படி அடாவடி செய்யும் நபர்களின் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கடன் வாங்கும் பெண்களை தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு தள்ளபடுவார்கள் . இதில் பாதிக்கபட்ட பெண்கள், இந்த கந்து வட்டி வசூல் செய்ய வரும் டிப்டாப் ரவுடி ராஜாகளை போலீசார் கவனிக்கவில்லை என்றால் குடும்ப பெண்களின் வாழ்க்கை மிக மோசமாக போகும் என்பதில் சந்தேகமில்லை. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை பொறுத்திருந்து பார்ப்போம்…