கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் குண்டுகள் நிரப்பபட்ட துப்பாக்கி (பிஸ்டல்), ஒரு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ( வயது 28 ) கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரத்தினபுரி சந்திரசேகர் (வயது 37) சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், வரதராஜபுரம் மெயின் ரோடு கவுதம் (வயது 28) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி நின்றது விசாரணையில் தெரியவந்தது.. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.