பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் கைது..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நேற்று கோவைபுதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் இ.பி. காலனி, சக்தி நகரை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 23) கிருஷ்ண பிரசாத் ( வயது 20 ) ரபீத் ( வயது 20) பி கே . புதூர் அப்துல் தவுபிக் ( வயது 20 )அபிஷேக் ( வயது 21 )முகமத் சாகிக் (வயது 17) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..