கோவை வெரைஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று அங்குள்ள சிஎம்சி காலணி, விளையாட்டு மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் கஞ்சா இருந்தது கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த விஷ்ணு ( வயது 20 )சி.எம்.சி. காலணி ராம் சங்கர் ( வயது 21) என்பது தெரிய வந்தது. மொத்தம் 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று உக்கடம் – சுங்கம்பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து விசாரணை செய்தார் . அவர்களிடம் 20,950 கிராம் கஞ்சா இருந்தது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கணபதி, லட்சுமி புரத்தைச்சேர்ந்த ஹரிஹரன் என்ற கௌதம் ( வயது 24) ரத்தினபுரி பழனியப்பன் வீதியைச் சேர்ந்த சண்முக கிருஷ்ணன் ( வயது 24) சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா (வயது23) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஜோஸ்வா, பார்த்தசாரதி ஸ்கைவாக்கர் சூர்யா, தினேஷ், ஆசர் ஆகியோரே தேடி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் இந்த கும்பல் கஞ்சா கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.