கள்ளத் துப்பாக்கியுடன் வந்த கும்பல் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ,சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் நேற்று வி.கே.ரோடு வினோபாஜி நகர், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கள்ளத் துப்பாக்கி (பிஸ்டல் )6 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி, குண்டுகள், 3 செல்போன் , ஒரு பைக், தோள்பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சேரன்மாநகர் விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்ட பிரபு ( வயது 22) காளப்பட்டி,விகே ரோடு காப்பி கடை ,ரத்தினகிரி வீதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் ஹரிஷ் (வயது 23)பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குண்டன் ராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது . அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது..