கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக செந்தில்குமார் ( வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் பிரபல கஞ்சா வியாபாரி ஆவார.இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்த குற்றத்திற்காக இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் கஞ்சா வியாபாரி செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.இதற்கான உத்தரவு நகல்கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்குமாருக்கு நேற்று வழங்கப்பட்டது .கோவை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் ஆசாமிகள் 8பேர் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.