பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகன் ஸ்ரீ வினோத் ( வயது 28) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீ வினோத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீ வினோத்திடம்அதற்கான நகல் நேற்று வழங்கப்பட்டது.