வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்த 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த‌ குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார்(47) பூபதி மகன் செந்தில்குமார் (40) உத்மான் மகன் முகமது யூசுப் (21) மற்றும் கருப்புசாமி மகன் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட 4 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர்.கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கு குற்றவாளிகளான ஆனந்தகுமார் (47), செந்தில் குமார் (40), முகமது யூசுப் (21) மற்றும் கார்த்திக் (21) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்..