பட்டாக் கத்தியுடன் கஞ்சா கும்பல் கைது.!!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி , சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு காந்திமா நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர் . விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ( வயது 24)நெல்லை மாவட்டம் , சங்கரன்கோவில் குருக்கம்பட்டியை சேர்ந்த மகேஷ் (வயது 19) திருப்பூர் ஹரி நாராயணன் ( வயது 18 ) கடலூர் திஸ்வந்த் (வயது 19) பரமக்குடி சஞ்சய் குமார் (வயது 18) சென்னை வியாசர்பாடி நவீன் ( வயது23) விருதுநகர் கிழவிக்குளம் ஆதித்யா (வயது 18) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 1050 கிராம் கஞ்சா, 7 செல்போன், ஒரு இருசக்கர வாகனம், ஒரு பட்டாக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..