கஞ்சா விற்பனை: வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை – ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்..!

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசாமி 19.3.2023 ஆம் ஆண்டு விபி பால் பண்ணை கடையில் செங்குன்றம் பகுதியில் அமோகமான கஞ்சா விற்பனை நடப்பதாக கண்காணித்த போது சென்னை தண்டை யார் பேட்டை சுனாமி குடியிருப்பு எச் எல் எல் நகர் பகுதியைச் சேர்ந்த சம்பத்தின் மகன் சீனிவாசன் வயது 43.என்பவன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது போலீசார் அவனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.அவனிடத்தில் இருந்த 23.680 கிலோ கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி மீது சென்னை போதைப்பொருட்களுக்கான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆணையர் அசோகன் மேற்பார்வையில் அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் விசாரணை அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் நீதிமன்ற அலுவல் தலைமை காவலர் வி க்டர் ஜெய்சிங் ஆகியோரின் சீரிய முயற்சியினால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளி சீனிவாசனுக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசாமி மற்றும் நீதிமன்ற அலுவல் தலைமை காவலர் விக்டர் ஜெய் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினரை ஆவடி போலீஸ் கமிஷனர்கி. சங்கர் வெகுவாக பாராட்டினார்.