சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் – வடமாநில பெண் கைது..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வது பிளாட் பார் மில் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரி லிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி தனிப்பிரிவு தலைமை காவலர் சங்கர நாராயணன் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோர் சோதனை செய்தனர் .சோதனையில் தாஹிரா பேகம் வயது 31 கணவர் பெயர் சாம்சல் முலக் சம்மர் டிக்கி பரத மான் மேற்கு வங்க மாநிலம் . அவர் வைத்திருந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அதிக போதை ஏற்றும் இந்த கஞ்சாவை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கடத்தி வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தாள் .இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு புழல் சிறையில் அடைத்தனர்..