சில்சார் – திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக விரைவு ரயில் சென்றது. அப்பொழுது அந்த ரயிலில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் துறையினர். அந்த ரயிலை கோவை ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்பொழுது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த கருப்பு கலர் பை ஒன்று இருந்தது. அந்தப் பையை காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் மூன்று பண்டல்களில் 3.492 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்தப் பெட்டியில் இருந்தவர்களை விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பை யாருடையது என்பது தெரியவில்லை. மேலும் அந்தப் பையன் கைப்பற்றிய காவல் துறையினர். இது குறித்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் அந்தப் பையை கைப்பற்றி அனைத்து ரயில்கள் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..